Advertisement

பேபிகார்ன் பரோட்டா செய்து பாருங்கள்... ருசித்து சாப்பிடுவீர்கள்

By: Nagaraj Tue, 20 Sept 2022 6:42:49 PM

பேபிகார்ன் பரோட்டா செய்து பாருங்கள்... ருசித்து சாப்பிடுவீர்கள்

சென்னை: பேபிகார்ன் பரோட்டா செய்து இருக்கிறீர்களா. செய்து பாருங்கள். ருசி அருமையாக இருக்கும்.

தேவையானவை: பேபி கார்ன் – 3 (துருவிக் கொள்ளவும்), கோதுமை மாவு – ஒரு கப், பச்சை மிளகாய் – 4, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒரு கப், உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு.

turmeric powder,chilli powder,tanya powder,wheat flour,babycorn ,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கோதுமை மாவு, பேபிகார்ன்

செய்முறை:கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய பேபி கார்ன், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லி, பேபிகார்னைப் போட்டு தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடம் கிளறவும். கலவை கெட்டியானதும் இறக்கவும்.

கோதுமை மாவில் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். இதை சப்பாத்தி போல் இட்டு வதக்கிய கலவையை அதன்மேல் பரப்பி உருட்டவும். மீண்டும் கனமான சப்பாத்திகளாக இடவும். தோசைக் கல்லில் நெய் விட்டு, சப்பாத்திகளைப் போட்டு, சுற்றிலும் நெய் விட்டு, வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும். சூப்பர் டேஸ்ட்டில் சத்தான பரோட்டா ரெடி!

Tags :