Advertisement

வீட்டிலேயே பிரட் சீஸ் பைட்ஸ் எளிய முறையில் செய்து பாருங்கள்

By: Nagaraj Fri, 17 June 2022 3:52:42 PM

வீட்டிலேயே பிரட் சீஸ் பைட்ஸ் எளிய முறையில் செய்து பாருங்கள்

சென்னை: பிரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு பிரட் சீஸ் பைட்ஸ் ஆக செய்து தாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 2பிரட் தூள் - 1/2 கப்சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்சீஸ் துண்டுகள் அல்லது துருவிய சீஸ்எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவுதண்ணீர் - 1/4

bread cheese,bread crumbs,corn flour,cheese slices,oil ,பிரட் சீஸ், பிரட் தூள், சோள மாவு, சீஸ் துண்டுகள், எண்ணெய்

செய்முறை:முதலில் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் தேவையான சதுர சீஸ் துண்டுகளை வைக்கவும் அல்லது தேவையான அளவு துருவிய சீஸ் தூவிக் கொள்ளவும்.

பின் அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை வைக்க வேண்டும். பின்பு ஒரு கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு சோள மாவை நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.

பின் வெட்டி வைத்துள்ள ஒரு பிரட் துண்டை எடுத்து, சோள மாவில் பிரட்டி, பின் பிரட் தூளில் பிரட்டி எடுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், பிரட் துண்டுகளைப் போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பிரட் சீஸ் பைட்ஸ் தயார்.

Tags :