Advertisement

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காளானில் குழம்பு செய்து பாருங்கள்

By: Nagaraj Mon, 21 Nov 2022 09:43:51 AM

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காளானில் குழம்பு செய்து பாருங்கள்

சென்னை: ஆரோக்கியம் அளிக்கும் காளானில் குழம்பு வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இதோ அதன் செய்முறை உங்களுக்காக.


தேவையானவை:

தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 1
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 மேஜைக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
அரைக்க
தேங்காய் துருவல் – 1/4 கப்
தாளிக்க
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
பட்டை – ஒரு இன்ச் அளவு
கிராம்பு – 2
கறிவேப்பிலை – சிறிது

flavor,mushroom,turmeric powder,cumin powder,coriander powder,coconut paste ,சுவை, காளான், மஞ்சள்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், தேங்காய் விழுது

செய்முறை: முதலில் காளானை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும். தக்காளி, வெங்காயம் இரண்டையும் நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பட்டை போட்டு பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் காளானை சேர்த்து கிளறவும்.

காளான் வதங்கியதும் ஒரு கப் தண்ணீரும், உப்பும் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும். மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான காளான் குழம்பு ரெடி.

Tags :
|