Advertisement

  • வீடு
  • சமையல் குறிப்புகள்
  • சாக்லேட் இடியாப்பம் செய்து கொடுத்து பாருங்கள்... குழந்தைகளை உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்!!!

சாக்லேட் இடியாப்பம் செய்து கொடுத்து பாருங்கள்... குழந்தைகளை உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்!!!

By: Nagaraj Sat, 18 Mar 2023 8:08:34 PM

சாக்லேட் இடியாப்பம் செய்து கொடுத்து பாருங்கள்... குழந்தைகளை உங்களை சுற்றி சுற்றி வருவார்கள்!!!

சென்னை: குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டை கொண்டு விதவிதமான பலகாரங்கள் செய்யலாம். அதில் சாக்லேட் இடியாப்பம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு - அரை கப், சாக்லேட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு - 10 (சிறிதாக நறுக்கவும்), நெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, தண்ணீர் - 1 கப்.

chocolate sauce,idiyappam,cashew dal,tamarind flour ,சாக்லேட் சாஸ், இடியாப்பம், முந்திரி பருப்பு, பச்சரிசி மாவு

செய்முறை: அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க தொடங்கியதும் நெய், உப்பு சேர்க்கவும். பின்னர் பச்சரிசி மாவை கொட்டி லேசாக கிளறி இறக்கவும்.

பின்னர் கட்டி பிடிக்காமல் கிளறி இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து இடியாப்பத்தை உதிர்த்துக்கொள்ளவும். அதனுடன் சாக்லேட் சாஸ், முந்திரி பருப்பு தூவி கிளறி சுவைக்கவும். குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :