Advertisement

வாழைப்பூவில் கட்லெட் செய்து பாருங்கள்... அசத்தலாக இருக்கும்

By: Nagaraj Sun, 10 July 2022 3:18:37 PM

வாழைப்பூவில் கட்லெட் செய்து பாருங்கள்... அசத்தலாக இருக்கும்

சென்னை: வாழை பூவில் செய்யும் பொரியலையோ அல்லது கூட்டையோ விருப்பமாக சாப்பிடுவதில்லை. எனவே இப்படி ருசியான கட்லெட் செய்து கொடுத்தால் தட்டாமல் சாப்பிடுவார்கள். வா சுவையான வாழைப்பூ கட்லெட்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1, உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி – 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது), தக்காளி – 2 (நறுக்கியது), பூண்டு – 10 (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 6 (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது), மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகு தூள்- 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது), எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன், முட்டை வெள்ளைக்கரு – 2, பிரட் தூள் – 1/4 கப், உப்பு – 1/4 ஸ்பூன், எண்ணெய் – 250 கிராம்.

turmeric powder,chili powder,pepper powder,garam masala,lemon juice,potato ,மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா,  எலுமிச்சை சாறு, உருளைக்கிழங்கு

செய்முறை : வாழைப்பூவை பொடியாக நறுக்கி, அதை உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் வாழைப்பூவில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வாழைப்பூவை சேர்த்து, சிறிது உப்பு தூவி கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

பின்பு மூடியைத் திறந்து கிளறி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு சில நொடிகள் கிளறி, எலுமிச்சை சாறு, மசித்த உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் நன்கு வதக்கி, இறக்கி குளிர வைக்க வேண்டும்.


பிறகு முட்டையின் வெள்ளைக்கருவில் உப்பு சிறிது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் குளிர வைத்த வாழைப்பூ கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி, முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கட்லெட்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வாழைப்பூ கட்லெட் தயாராகிவிடும்.

Tags :