Advertisement

அருமையான சுவையில் ஸ்பிரிங் ரோலை வீட்டில் செய்து பாருங்கள்!!!

By: Nagaraj Sun, 31 July 2022 2:46:03 PM

அருமையான சுவையில் ஸ்பிரிங் ரோலை வீட்டில் செய்து பாருங்கள்!!!

சென்னை: அனைவருக்கும் ஸ்பிரிங் ரோல் என்றால் பிடிக்கும். ஆனால் அதை வீட்டிலேயே செய்ய முடியுமா என்று கேட்பார்கள். இதோ அதற்கான செய்முறை உங்களுக்காக.

தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், பால், தண்ணீர் - தலா 50 மில்லி, நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி கலவை - 2 கப், சில்லி சாஸ், டொமேட்டா சாஸ் - தலா 2 டீஸ்பூன், பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

spring roll,vegetables,coconut chutney,maida flour,salt ,ஸ்பிரிங் ரோல, காய்கறிகள், தேங்காய் சட்னி, மைதா மாவு, உப்பு

செய்முறை: மைதாவுடன் பால், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து, இருபது நிமிடம் ஊற வைக்கவும். இதை ரொட்டிக்குத் தேவையான அளவு சிறிய பேடாக்களாக (அப்பளம் போல்) செய்து கொள்ளவும். நறுக்கிய காய்கறி கலவையை வேக வைக்கவும்.

வெந்ததும், அதில் பூண்டு விழுது, சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு அலுமினிய கடாயை அடுப்பின் மீது குப்புற கவிழ்த்து, பேடாவை ரொட்டியாக விசிறி போடவும். வெந்ததும் எடுத்து, அதில் வதக்கிய காய்கறி கலவையை நடுவில் வைத்து உருட்டவும்.


கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டிய உருளையைப் போட்டு, வெந்ததும் எடுக்கவும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டினால் ஸ்பிரிங் ரோல் தயார். அவ்வளவுதான். இதற்கு தேங்காய் சட்னி, சூப்பர் சைட் டிஷ்!

Tags :