Advertisement

உடலை வலுவாக்கும் வெந்தயக்களி செய்து கொடுத்து பாருங்கள்!!!

By: Nagaraj Sat, 18 Mar 2023 10:56:17 PM

உடலை வலுவாக்கும் வெந்தயக்களி செய்து கொடுத்து பாருங்கள்!!!

சென்னை: நீண்ட நேரம் பசியைத் தாங்குவதற்கும், உடலை உரமாக்கவும் வெந்தயக் களி சிறந்த உணவு. இப்போதைய தலைமுறையில் பலர் களி வகைகளை வீட்டில் செய்வது கிடையாது. ஆனால் ஆரோக்கிய வாழ்வை நாடும் மக்கள் மீண்டும் பழந்தமிழர் உணவு முறையை மீட்டெடுக்க விரும்புகிறார்கள்.
உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான சத்துள்ள வெந்தயக் களி செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:
இட்லி அரிசி -200 கிராம்வெந்தயம்-25 கிராம்வெல்லம் - 50 கிராம்நல்லெண்ணெய்-50 மிலிஅரிசி மற்றும் வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

fenugreek,rice,ghee,jaggery,kale ,வெந்தயம், அரிசி, நல்லெண்ணெய், வெல்லம், களி

செய்முறை: அரிசி மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவி, மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். தோசை மாவு பதத்திற்கு அரைத்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன், அரைத்து வைத்த மாவை, சிறிது சிறிதாக சேர்க்கவும். மாவை சேர்க்கும் போது, பெரிய கரண்டி வைத்து நன்கு கிளறவும். தொடர்ச்சியாக 15 முதல் 20 நிமிடம் வரை, கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கிளறும் போது, கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நன்கு வெந்த பிறகு, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பொடித்த வெல்லத்தை சேர்க்கவும். அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த வெந்தயக்களி ரெடி.

Tags :
|
|