Advertisement

வீட்டிலேயே செய்து பாருங்கள் கொய்யா ஸ்குவாஷ்

By: Nagaraj Fri, 28 Oct 2022 10:24:21 PM

வீட்டிலேயே செய்து பாருங்கள் கொய்யா ஸ்குவாஷ்

சென்னை: கொய்யா ஸ்குவாஷ் செய்து பாருங்கள். அருமையான சுவையில் இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம். குழந்தைகளும் விரும்பி அருந்துவார்கள்.

தேவையான பொருட்கள்:

பழுத்த கொய்யா – 500 கிராம்
சீனி – 200 கிராம்
எலுமிச்சை ஜூஸ் – 4 டீஸ்பூன்
உப்பு – ஒரு டீஸ்பூன்
தண்ணீர் – 1200 மில்லி லிட்டர்

essence,flavor,guava,lemon juice,squash,sugar, ,எசன்ஸ், எலுமிச்சை ஜுஸ், கொய்யா, சீனி, சுவை, ஸ்குவாஷ்

செய்முறை: 500 மில்லி லிட்டர் தண்ணீர் எடுத்து அதில் சீனியை கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.

பின் கொய்யாவை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி 100 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும். கொய்யா நன்கு வெந்தவுடன் உப்பு, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து இறக்கவும்.

அதனை செய்து வைத்துள்ள சீனி சிறப்புடன் சேர்க்கவும். பின் இதனுடன் எசன்ஸ், மீதமுள்ள தண்ணீர் சேர்த்து கட்டிகளில்லாமல் நன்கு கலக்கவும். இறுதியில் அதனை வடிகட்டி குளிர வைத்து பருகவும். இப்போது சுவையான கொய்யா ஸ்குவாஷ் ரெசிபி ரெடி.

Tags :
|
|
|
|