Advertisement

ஆரோக்கியத்தை உயர்த்தும் அத்திபழ பாசந்தி செய்து பாருங்கள்

By: Nagaraj Tue, 27 Dec 2022 11:26:11 PM

ஆரோக்கியத்தை உயர்த்தும் அத்திபழ பாசந்தி செய்து பாருங்கள்

சென்னை: உடல் ஆரோக்கியம் அதிகரிக்க அத்திப்பழ பாசந்தி செய்து பாருங்க. அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொண்ட பழமாகும். இந்த அத்திபழத்தை கொண்டு செய்யப்படும் அத்திப்பழ பாசந்தி அலாதியான சுவை தரும்,செய்வதும் மிக எளிது.

தேவையானவை பொருட்கள்:
பால் – 4 கப்அத்திபழம் – 2 கப்எலுமிச்சை சாறு – 1/2 கப்சோளமாவு – 1 ஸ்பூன் (பாலில் கரைத்துகொள்ளவும்)பால் கோவா – 1 கப்சர்க்கரை – 1/2 கப்

figs,milk,sugar,balcoa,cornmeal ,அத்திப்பழம், பால், சர்க்கரை, பால்கோவா, சோளமாவு

செய்முறை: அத்திப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சவும், பால் பொங்கியவுடன் மிதமான நிலையில் பாலை கலக்கி கொண்டிருக்கவும்.

பின்னர் தொடர்ந்து கலக்கும்போதே, பாலில் ஒவ்வொரு துளியாக எலுமிச்சை சாறினை சேர்க்கவும். மொத்தமாக சேர்த்தால் பால் வீணாகிவிடும். பாசந்தியில் சோள மாவு பாலில் கரைத்தது, பால் கோவா, சக்கரை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

காய்ச்சிய பாலுடன் அனைத்து பொருட்களும் நன்றாக கலந்தபின், நறுக்கிய அத்திபழங்களை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். இந்த பாசந்தியை குளிர்சாதன பெட்டியில் குளிர வைத்து, அதில் நறுக்கிய அத்திப்பழ துண்டுகளை போட்டு சில்லென்று பரிமாறவும். இப்பொது சுவையான அத்திப்பழ பாசந்தி ரெடி.

Tags :
|
|
|
|