Advertisement

யாழ்ப்பாண தோசை செய்து பாருங்கள்... ருசி பிரமாதமாக இருக்கும்

By: Nagaraj Sun, 02 Apr 2023 2:53:35 PM

யாழ்ப்பாண தோசை செய்து பாருங்கள்... ருசி பிரமாதமாக இருக்கும்

சென்னை: யாழ்ப்பாண தோசை செய்து பாருங்கள். ருசியும் அருமையாக இருக்கும். உங்கள் குடும்பத்தினரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
கோது நீக்கிய உளுந்து – 1 சுண்டுஅவித்த வெள்ளை மா – 1 சுண்டுஅவிக்காத வெள்ளை மா – 1 சுண்டுவெந்தயம் – 1 தே. கரண்டிசின்னச்சீரகம் – 1 தே. கரண்டிமிளகு – 1/2 தே. கரண்டிஉப்பு – தேவையான அளவுமஞ்சள் தூள் – 1/4 தே. கரண்டிதாளிப்பதற்கு :-சின்ன வெங்காயம் – 8 (வெட்டி)செத்தல் மிளகாய் – 3கடுகு – 1/2 தே. கரண்டிபெருஞ்சீரகம் – 1 தே. கரண்டிகறிவேப்பிலை – 1 நெட்டு

gram,rice,salt,turmeric powder,water ,உளுந்து, அரிசி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர்

செய்முறை: உளுந்தை 3-4 மணி நேரம் ஊற விடவும். சீரகம், மிளகு, வெந்தயத்தை இன்னொரு சிறிய பாத்திரத்தில் ஊறவிடவும். உளுந்து ஊறியதும், நன்றாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் ஊறவைத்த சீரகம், மிளகு, வெந்தயத்தையும் சேர்த்து பட்டுப் போல் அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவில் அவித்த மா, அவிக்காத மாவைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து 10-12 மணித்தியாலங்கள் புளிக்க விடவும். புளித்ததும், உப்பு, மஞ்சள் தூள், போட்டு நன்றாக கலக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, தாளிதப் பொருட்களை தாளித்து எடுக்கவும்.

தாளித்ததையும் தோசை மாவில் போட்டு, நன்றாக கலந்து தோசைகளாக சுட்டு பரிமாறுக. ருசி அருமையாக இருக்கும்.

Tags :
|
|
|