Advertisement

நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கில் லட்டு செய்து பாருங்கள்!!!

By: Nagaraj Tue, 21 Feb 2023 10:29:35 PM

நார்ச்சத்து நிறைந்த பனங்கிழங்கில் லட்டு செய்து பாருங்கள்!!!

சென்னை: பனங்கிழங்கில் லட்டா என்று ஆச்சரியப்பட வேண்டாம். ஆரோக்கியத்தை அளிக்கும் பனங்கிழங்கில் பல வகை உணவுகள் செய்யலாம். அதில் லட்டு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு – 6துருவிய தேங்காய் – 1 கப்நாட்டுச்சர்க்கரை – ½ கப்ஏலக்காய் – 2

panangi angu,grated coconut,natucharkarai,round,laddu ,பனங்கிழங்கு, தேங்காய்துருவல், நாட்டுச்சர்க்கரை, உருண்டை, லட்டு

செய்முறை: பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து, நார் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இத னால் பனங்கிழங்கின் பிசுபிசுப்பு தன்மை நீங்கும்.

அரை மணி நேரம் கழித்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து, அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கிக்கொள்ளவும். அதை அகலமான பாத்திரத்தில் கொட்டவும்.

இப்போது பனங்கிழங்கு மாவுடன் தேங்காய்த் துருவல் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து, உருண்டைகளாகப் பிடிக்கும். சுவையான ‘பனங்கிழங்கு லட்டு’ தயார்.

Tags :
|