Advertisement

வித்தியாசமான சுவையில் மலேசியா பச்சடி செய்து பாருங்கள்

By: Nagaraj Sun, 03 Sept 2023 4:55:43 PM

வித்தியாசமான சுவையில் மலேசியா பச்சடி செய்து பாருங்கள்

சென்னை: மலேசியாவில் கல்யாணம், மற்ற விஷேசங்களிலும் பிரியாணியுடன் பரிமாறப்படும் மலேசியா பச்சடி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பழுத்த அன்னாசி பழம் - ஒன்றுபழுத்த மிளகாய் - 2பச்சை மிளகாய் - 2பூண்டு - 4 பரல்சின்ன வெங்காயம் – 10மஞ்சள் பொடி - சிறிதுசீனி - 2 தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டிபட்டை - ஒரு துண்டுகிராம்பு - 2

pineapple,turmeric,sugar,onions,biryani ,அன்னாசிப்பழம், மஞ்சள், சீனி, சின்ன வெங்காயம், பிரியாணி

செய்முறை: தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். அன்னாசி பழத்தை பொடியாக நறுக்கி தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், பழுத்த மிளகாய், பூண்டை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும் மிளகாய் ( பச்சை மற்றும் சிவப்பு ) மற்றும் பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு 4 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி, சீனி போட்டு கொதிக்க விடவும் கொதிக்கும் கலவையுடன் வேக வைத்த அன்னாசிப் பழத்தை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். வித்தியாசமாகவும் அதே சமயத்தில் ருசியாகவும் இருக்கும் இந்த பச்சடி மலாய்காரர்களின் கல்யாணம், மற்ற விஷேசங்களிலும் பிரியாணியுடன் பரிமாறப்படும்.

Tags :
|
|