Advertisement

அருமையான முறையில் பால் சுறா மீன் குழம்பு செய்து பாருங்கள்

By: Nagaraj Thu, 02 Nov 2023 10:54:35 AM

அருமையான முறையில் பால் சுறா மீன் குழம்பு செய்து பாருங்கள்

சென்னை: அருமையான முறையில் பால் சுறா மீன் குழம்பு செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பால் சுறா மீன் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் உகந்ததாக மருத்துவர்களே பரிந்துரைப்பதுண்டு, இத்தகைய மருத்துவ குணம் கொண்ட பால் சுறாவில் மீன் குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம்.

தேவையானவை:
பால் சுறா -கால் கிலோதேங்காய் – கால் கப்புளி – எலுமிச்சை அளவுசின்ன வெங்காயம் - 15தக்காளி - 2பூண்டு - 5சீரகம் - 2 ஸ்பூன்மீன் குழம்பு மசாலா- 2 ஸ்பூன்மிளகாய்த் தூள்- 1 ஸ்பூன்தனியாத் தூள் - 2 ஸ்பூன்மஞ்சள்தூள் – 2ஸ்பூன்கடுகு - 1 ஸ்பூன்வெந்தயம் - 1 ஸ்பூன்கறிவேப்பிலை- சிறிதளவு,நல்லெண்ணெய்- தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு

milk shark,garlic,cumin,spice powder,chili powder,sour cream ,பால் சுறா, பூண்டு, சீரகம், மசாலா தூள், மிளகாய்த்தூள், புளிக்கரைசல்

செய்முறை: புளியை தண்ணீரில் ஊறவைக்கவும். அடுத்து தேங்காயை மிக்சியில் போட்டு பால் எடுத்துக் கொள்ளவும். அடுத்து பால் சுறாவைக் கழுவி நறுக்கிக் கொள்ளவும். பூண்டை ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் பூண்டு சீரகம், உப்பு, மஞ்சள்தூள், மீன் குழம்பு மசாலா, மிளகாய்த் தூள், தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

இறுதியில் மீனைப் போட்டு 10 நிமிடங்கள் வேகவிட்டு தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் பால் சுறா மீன் குழம்பு ரெடி.

Tags :
|
|