Advertisement

அசத்தல் சுவையில் வெண் பூசணியில் மோர்க் குழம்பு செய்து பாருங்கள்!

By: Nagaraj Sat, 28 Jan 2023 9:55:19 PM

அசத்தல் சுவையில் வெண் பூசணியில் மோர்க் குழம்பு செய்து பாருங்கள்!

சென்னை: வெண் பூசணி நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். இதில் மோர் குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் - 1/4 கிலோதேங்காய் துருவல் - 3 ஸ்பூன்பச்சை மிளகாய் - 4சீரகம் - 1 ஸ்பூன்கடலைபருப்பு - 1 ஸ்பூன்அரிசி - 1 ஸ்பூன்மோர் - 2 கப்மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்கடுகு - 1/2 ஸ்பூன்உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்கருவேப்பிலை - சிறிதளவுமல்லிதழை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - தேவையான அளவுபெருங்காயம் - சிட்டிகைமோர்மிளகாய் - 2

gram,cardamom,chilli,coriander,coriander ,உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, மோர்மிளகாய்,தாளித்து, மோர்கரைசலை

செய்முறை: கடலைபருப்பு, அரிசி 2 மணிநேரம் இரண்டையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்து வைக்கவும். தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் நன்றாக அரைத்து கொள்ளவும்.

பூசணிக்காயை வேகவைத்து கொள்ளவும். பின் மோரில் பூசணிக்காய், அரைத்த மசாலா,மஞ்சள்தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து தயார் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, மோர்மிளகாய்,தாளித்து மோர்கரைசலை அதில் சேர்க்கவும். நன்கு நுரை கூடியதும் மல்லிதழை தூவி இறக்கவும்.

Tags :
|
|