Advertisement

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மாதுளம் பழத்தில் சட்னி செய்து பாருங்கள்

By: Nagaraj Sun, 06 Nov 2022 9:22:07 PM

ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மாதுளம் பழத்தில் சட்னி செய்து பாருங்கள்

சென்னை: மாதுளம் பழத்தில் சட்னியா என்று கேட்காதீர்கள் செய்து பாருங்கள் அப்போதுதான் தெரியும் சுவை. என்ன செய்து பார்ப்போமா.

தேவையான பொருட்கள்:

மாதுளம் பழம் – 1
புதினா தழை – 1 கைப்பிடி
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
இஞ்சி – சிறிய துண்டு
பச்சைமிளகாய் – 3
வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்

pomegranate pearls,health,chutney,chillies,coriander leaves ,மாதுளம் முத்துக்கள், ஆரோக்கியம், சட்னி, மிளகாய், கொத்தமல்லி தழை

செய்முறை: முதலில் கொத்தமல்லி தழை, பச்சைமிளகாய், இஞ்சி, புதினாவை எடுத்து பொடியாக நறுக்கியபின் நன்கு சுத்தம் கழுவி கொள்ளவும். பின்பு மாதுளம் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி அதிலுள்ள முத்துக்களை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கியபின் இறக்கி ஆறவைக்கவும்.

பிறகு வதக்கி ஆற வைத்த கலவை, மாதுளை முத்துக்கள், உப்பு, சீரகத்தூள் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்து பரிமாறினால் ருசியான மாதுளம் பழ சட்னி ரெடி. ருசி மட்டுமல்ல ஆரோக்கியமும் நிறைந்தது. தேவைபட்டால் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்தும் கொள்ளலாம். மேலும் இந்த சட்னியை புலாவுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு ஏற்றது

Tags :
|