Advertisement

ரோஜாப்பூ வனிலா பாயாசம் செய்து பாருங்கள்

By: Nagaraj Wed, 02 Nov 2022 4:07:52 PM

ரோஜாப்பூ வனிலா பாயாசம் செய்து பாருங்கள்

சென்னை: ரோஜாப்பூ வனிலா பாயாசம் செய்வோமா. வித்தியாசமான ருசியுடன் சூப்பராக இருக்கும். அதை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போமா.


தேவையானவை:-
ரோஜாப்பூ – 4, பால் – ஒரு லிட்டர், கார்ன் ஃப்ளோர் – 2 டேபிள் ஸ்பூன், சீனி – 2 டேபிள் ஸ்பூன், வனிலா எஸன்ஸ் – சில துளிகள், ரோஸ் கலர் –சில துளிகள். பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா 4 நெய்யில் வறுத்துப் பெரிய துண்டுகளாகப் பொடிக்கவும்.

vanilla essence,rosecolor,rose petal,milk,cool ,வனிலா எஸன்ஸ், ரோஸ்கலர், ரோஜா இதழ், பால், ஆறவிடவும்

செய்முறை:- ரோஜாப்பூவை உதிர்த்து வைக்கவும். பாலை நன்கு காய்ச்சி சிறிது எடுத்து ஆறவிடவும். மீதிப்பாலில் கார்ன்ஃப்ளோரையும் சீனியையும் போட்டுப் பாதியாகும் அளவு காய்ச்சி ஆறவைக்கவும். முன்பு எடுத்த வைத்த பால் ஆறியதும் ரோஜா இதழ்களைப் போட்டு மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.

இதை கார்ன்ஃப்ளோர் சீனி போட்டுக் காய்ச்சிய பாலில் ஊற்றி வனிலா எஸன்ஸ், ரோஸ் கலர் சேர்த்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குளிர்விக்கவும். வறுத்த பாதாம் பிஸ்தா முந்திரித் துண்டுகளைப் பரிமாறும்போது கண்ணாடிக் குவளைகளில் ஊற்றி மேலாகத் தூவிக் கொடுக்கவும். சாப்பிடுபவர்கள் உங்களை பாராட்டுவார்கள்.

Tags :
|