Advertisement

சப்பாத்தி, பூரிக்கு செம சைட் டிஷ் வெஜ் கடாய் செய்து பாருங்கள்

By: Nagaraj Thu, 26 Jan 2023 06:55:25 AM

சப்பாத்தி, பூரிக்கு செம சைட் டிஷ் வெஜ் கடாய் செய்து பாருங்கள்

சென்னை: அது என்னங்க வெஜ் கடாய் என்கிறீர்களா. சப்பாத்தி, தோசைக்கு சூப்பரான சைட் டிஷ்தாங்க இது. காய்கறிகள் சேர்த்த்து. உடலுக்கு ஆரோக்கியமும் அளிக்கும்.

தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு : 1/4 கிலோகேரட்:200 கிராம்காளிஃப்ளவர்தக்காளி:3குடைமிளகாய்:2வெங்காயம்:3பச்சைப் பட்டாணி:100 கிராம்நெய்:2 ஸ்பூன்நல்லெண்ணெய்: 2 ஸ்பூன்சீரகம் :1/2ஸ்பூன்மஞ்சள் தூள்:1/4 ஸ்பூன்சீரகத்தூள்: 1 ஸ்பூன்மல்லி பொடி:1 ஸ்பூன்மிளகாய் பொடி :2 ஸ்பூன்கரம்மசாலா பொடி:1 ஸ்பூன்மிளகு பொடி :1/2ஸ்பூன்தேவையான அளவு உப்புஅரைத்து வைத்த தேங்காய் :1 கப்கொத்தமல்லி தழை:அரை கட்டுஇஞ்சி பூண்டு விழுது : 2 ஸ்பூன்

potato,cauliflower onion,tomato,chapati ,உருளைக் கிழங்கு, காளிஃப்ளவர் வெங்காயம், தக்காளி, சப்பாத்தி

செய்முறை: உருளைக் கிழங்கு, காளிஃப்ளவர் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட், ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைப் பட்டாணியை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில், ஒரு ஸ்பூன் நெய், நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் தாளிக்கவும். சீரகம் பொரிந்த உடன் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். நன்றாக வதங்கிய உடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும். இத்துடன் பச்சைப் பட்டாணியை சேர்க்கவும். இதன்பின் சீரகத்தூள், மஞ்சள் தூள், உள்ளிட்ட அனைத்து பொடிகளையும் கொடுத்துள்ள அளவுப் போட்டு நன்றாக வதக்கவும்.

இந்த கலவை நன்கு வதங்கிய பின், பின்னர் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதி வந்தபின் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி கடாயை மூடிபோட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

10 நிமிடம் கழித்து காய்கள் நன்கு வெந்து கிரேவி பதத்திற்கு வந்திருக்கும். அப்போது கொத்தமல்லி தழை சேர்த்து ஸ்டவ்வை நிறுத்திவிடவும். சுவையான கடாய் வெஜிடபிள் தயார். இந்த அருமையான கடாய் வெஜிடபிள் சப்பாத்தி, பூரி, தோசை உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Tags :
|
|