Advertisement

தீபாவளிக்கு எள்ளு முறுக்கு செய்து பாருங்கள்

By: vaithegi Sun, 05 Nov 2023 5:03:45 PM

தீபாவளிக்கு எள்ளு முறுக்கு செய்து பாருங்கள்


பொதுவாக நமக்கு தீபாவளி என்றாலே நமது வீடுகளில் கொண்டாட்டமாக தான் இருக்கும். அதில் முக்கிய பங்கை வகிப்பது பலகாரம் தான். அந்த வகையில் நாம் நமது வீடுகளில் பல வகையான உணவுகளை செய்வதுண்டு. தற்போது இப்பதிவில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய எள்ளு முறுக்கு செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம் வாங்க.

தேவையானவை

பொட்டுக்கடலை பொடி – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 கப்
உளுந்து மாவு – கால் கப்
கருப்பு எள்ளு – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காய தூள் – சிறிதளவு
உருக்கிய வெண்ணெய் – 1 ஸ்பூன்

sesame twist,diwali ,எள்ளு முறுக்கு,தீபாவளி

செய்முறை விளக்கம் :

முதலில் எள்ளு முறுக்கு செய்ய தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடி கனமான பாத்திரத்தில் பொட்டுக்கடலை பொடி, அரிசி மாவு, உளுந்து மாவு, கருப்பு எள்ளு, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள், உருக்கிய வெண்ணெய் இவை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின் அதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து ரொட்டி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிசைந்த மாவை 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் ஊற வைத்து, அதன்பின் முறுக்கு செய்ய தொடங்க வேண்டும்.

எண்ணெய் சூடு ஏறிய பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் நமக்கு தேவையான வடிவத்தில் பிழிந்து எடுத்து, கொதித்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய எள்ளும் முறுக்கு தயார்.

இந்த முறுக்கை நாம் செய்து வைத்து, 2 வாரங்கள் வரை வேண்டுமானாலும் வைத்திருந்து சாப்பிடலாம். கடைகளில் நாம் வாங்குவதை விட வீட்டில் செய்யும்போது அது சுத்தமானதாக காணப்படுவதோடு. நாம் திருப்தியாக சாப்பிடக்கூடிய வண்ணம் நமக்கு தேவையான அளவு செய்து கொள்ளலாம், செலவு மிச்சமாகும்.

Tags :