Advertisement

காரசாரமான மலாய் பிக்கிள் செய்து பாருங்க... ருசி பிரமாதமாக இருக்கும்!!!

By: Nagaraj Mon, 19 June 2023 7:26:51 PM

காரசாரமான மலாய் பிக்கிள் செய்து பாருங்க... ருசி பிரமாதமாக இருக்கும்!!!

சென்னை: மலாய் பிக்கிள் (ஊறுகாய்) செய்முறை உங்களுக்காக. அருமையாக ருசியில் காரசாரமான இந்த பிக்கிள் மிகவும் பிடிக்கும். செய்து பாருங்கள்.

தேவையானவை :
சின்ன வெங்காயம் - 200 கிராம்கேரட் - 4பச்சை மிளகாய் - 100 கிராம்பேரீச்சம்பழம் - 50 கிராம்சர்க்கரை - கால் கப்வினிகர் - 250 mlஉப்பு தேவைக்கேற்ப.
அரைக்க :
மிளகாய் வற்றல் 15பூண்டு - 1இஞ்சி - 2 அங்குல துண்டுகடுகு - 2 டீஸ்பூன்பேரீச்சம்பழம் - 50 கிராம்.

delicious,malay pickle,hearty,persimmon fruit ,சுவையானது, மலாய் பிக்கிள், மனம் கவரும், பேரீச்சம் பழம்

செய்முறை: கேரட்டையும் பேரீச்சம்பழத்தையும் மெல்லிசா ஒன்றரை அங்குலம் நீள துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை தோலுரித்து முழுசா வைக்கவும். பச்சை மிளகாய்களை கீறிக்கொள்ளவும்.

அரைப்பதற்கு எடுத்துக்கொண்ட சாமான்களை வினிகர் சேர்த்து மசிய அரைத்தெடுக்கவும். அரைத்த விழுதை மீதமுள்ள வினிகர் மற்றும் சர்க்கரையுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பின் அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் இறக்கி, உப்பு சேர்த்துக் கலந்து வைத்துள்ள காய் பேரீச்சம்பழ கலவை மீது ஊற்றி கலந்து விடவும். ஆறிய பின் பாட்டிலில் அடைத்து வைத்து, இரண்டு நாள் கழித்து பரிமாறவும். சுவைக்க சுவையான, மலாய் பிக்கிள் நிச்சயம் மனம் கவரும்!

Tags :
|