Advertisement

மரவள்ளிக்கிழங்கு தோசை செய்து பாருங்கள்

By: Nagaraj Sat, 10 Sept 2022 2:22:35 PM

மரவள்ளிக்கிழங்கு தோசை செய்து பாருங்கள்

சென்னை: மரவள்ளி கிழங்கு தோசை செய்துள்ளீர்களா. அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் நிறைந்த இதை காலை டிபனாக செய்து தாருங்கள்.
தேவையானவை
பச்சரிசி 1/4 கிலோமரவள்ளிக் கிழங்கு 1/4 கிலோபச்சை மிளகாய் 3சீரகம் 1 ஸ்பூன்வெந்தயம் 1 ஸ்பூன்

tapioca,rice,dosa,green chili,cumin ,மரவள்ளிக்கிழங்கு, அரிசி, தோசை, பச்சை மிளகாய், சீரகம்

செய்முறை:முதலில் பச்சரிசியுடன் வெந்தயத்தை ஒரு 3 மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளி கிழங்கில் உள்ள தோலை சீவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு அரிசி, சீரகம், வெந்தயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

நறுக்கி வைத்த மரவள்ளி கிழங்கை மிக்சியில் அரைத்து மாவில் சேர்த்து கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடான பிறகு மாவை ஊற்றவும்.

தோசை நன்றாக வேக சுற்றி எண்ணெயை ஊற்றவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறியவுடன் மரவள்ளி கிழங்கு தோசையை சூடாக பரிமாறுங்கள். சுவை பிரமாதமாக இருக்கும்.

Tags :
|
|