Advertisement

கோதுமை மாவில் ஊத்தாப்பம் செய்து பாருங்க செம்ம ருசியாக இருக்கும்

By: vaithegi Sun, 30 July 2023 3:46:29 PM

கோதுமை மாவில் ஊத்தாப்பம் செய்து பாருங்க செம்ம ருசியாக இருக்கும்

சுட சுட ஆவி பறக்க ஊத்தாப்பம் கோதுமை மாவில் செய்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம். காலையில் 10 நிமிஷத்தில் என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே செய்து அசத்தக்கூடிய இந்த கோதுமை மாவு ஊத்தாப்பம் இதே மாதிரி நீங்களும் வீட்டில் தயாரித்து பாருங்கள், குழந்தைகள் கூட விட்டு வைக்க மாட்டார்கள். இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவாங்க

கோதுமை மாவு ஊத்தாப்பம் செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப், ரவை – அரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, கருவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், பேக்கிங் சோடா – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தயிர் – முக்கால் கப்.

செய்முறை : கோதுமை மாவு ஊத்தாப்பம் தயார் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை கப் அளவிற்கு ரவை சேர்க்க வேண்டும். ரவை வறுத்த ரவை அல்லது வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

அதன் பின்னர் இவற்றை நன்கு கலந்து வைத்த பின்பு தோல் உரித்து பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை உதிர்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்துள்ள தக்காளி துண்டுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். காரத்திற்கு ஒரே ஒரு பச்சை மிளகாயை காம்பு நீக்கி பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

wheat,puff ,கோதுமை ,ஊத்தாப்பம்

இவை எல்லாவற்றையும் சேர்த்த பின்பு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், பேக்கிங் சோடா ஆகியவற்றை கால் ஸ்பூனுக்கும் குறைவாக சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள். அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து விட்ட பின்பு முக்கால் கப் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். சாதாரண தோசை மாவு போல ஊற வைக்காமல் இன்ஸ்டன்ட் ஆக செய்வதால் புளித்திருக்க வாய்ப்பில்லை எனவே தயிர் சேர்த்தால் புளிப்பு சுவை கூடி சரியான பதத்திற்கு மாவு இருக்கும்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு சரியாக நீர்க்கக் கரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்பொழுது மாவு ரெடி! இந்த மாவை மெல்லிய தோசை போல வார்க்காமல் சற்று தடிமனாக ஊத்தாப்பம் போல தோசை கல் சூடானதும் வார்த்து எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வறுத்து எடுத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..


Tags :
|