Advertisement

ப்ரைட் சிக்கன் பிரியாணியை ருசியாக வீட்டில் செய்து பாருங்கள்

By: Nagaraj Sun, 26 June 2022 8:19:30 PM

ப்ரைட் சிக்கன் பிரியாணியை ருசியாக வீட்டில் செய்து பாருங்கள்

சென்னை: விடுமுறை தினங்களில் ஓட்டல் சுவையில் வீட்டிலேயே ப்ரைட் சிக்கன் பிரியாணி செய்து பாருங்கள். அதன் செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள் -
பெரிய வெங்காயம் - 2 அல்லது 3
தக்காளி - 1
புதினா - 1/2 கப்
கொத்தமல்லி தழை - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 1/2 மேஜைக்கரண்டி
மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
சீரக தூள் - 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 மேஜைக்கரண்டி
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
பட்டை - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 3
நெய் - 2 மேஜைக்கரண்டி
பால் - 4 மேஜைக்கரண்டி
சிக்கன் பொரிப்பதற்கு -
சிக்கன் - 400 கிராம்
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரக தூள் - 1 மேஜைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
தயிர் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

சாதம் வடிக்க -

பாஸ்மதி அரிசி - 500 கிராம்
கிராம்பு - 5
பட்டை - 2
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 4
உப்பு - தேவைக்கேற்ப

bark,cloves,brinjal leaf,chicken biryani,coriander leaves ,
பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சிக்கன் பிரியாணி, கொத்தமல்லி தழை

செய்முறை: சிக்கனை நன்றாக கழுவி தண்ணீரை நன்கு வடிக்கவும். பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள், சீரக தூள், மஞ்சள் தூள், தயிர், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். வெங்காயத்தை நீள வாக்கில் கட் செய்து கொள்ளவும். தக்காளி, கொத்தமல்லி தழை, புதினா அனைத்தையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். சிக்கன் ஊறியதும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். சூடானதும் கடாய் கொள்ளும் அளவிற்கு சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வேக வைத்து சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு அதே எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு நன்றாக பொரித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்க்கவும். உப்பு சரி பார்த்து விட்டு அரிசியை போடவும். அரிசி 90% வெந்ததும் அதை வடித்து விடவும். பட்டை, கிராம்பை அதிகமாக விரும்பாதோர் சாதத்தை வடித்ததும் அதிலிருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் எடுத்து விடவும்.

ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைக்கவும். 2 மேஜைக்கரண்டி எண்ணெய் (சிக்கனை பொரித்த எண்ணெயை உபயோகபடுத்தலாம்) மற்றும் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்க்கவும். பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். பிறகு மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.

bark,cloves,brinjal leaf,chicken biryani,coriander leaves ,
பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சிக்கன் பிரியாணி, கொத்தமல்லி தழை

அடுத்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும். பிறகு தயிர், பாதி கொத்தமல்லி மற்றும் புதினா தழை சேர்த்து 5 நிமிடம் கிளறவும். இப்போது வறுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக 2 நிமிடம் கிளறவும்.

அடுப்பை சிம்மில் வைத்து வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்க்கவும். அதன் மேல் பொறித்த வெங்காயம் மற்றும் மீதமுள்ள புதினா, கொத்தமல்லி தழை சேர்க்கவும். அதன் மேல் பால் ஊற்றவும். பிறகு அலுமினியம் பாயில் போட்டு மூடியை போடவும். டைட்டாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மூடியை போட்டு சப்பாத்தி மாவை சுற்றி ஒட்டி விட வேண்டும்.

20 நிமிடம் வரை நன்கு குறைந்த தீயில் வைத்து விட்டு அடுப்பை அணைக்கவும். 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறி பரிமாறவும். சுவையான ப்ரைட் சிக்கன் பிரியாணி ரெடி

Tags :
|
|