Advertisement

பருப்பு மாவத்தல் குழம்பு செய்து பாருங்கள்... குடும்பத்தினர் ருசித்து சாப்பிடுவார்கள்

By: Nagaraj Mon, 20 June 2022 3:32:24 PM

பருப்பு மாவத்தல் குழம்பு செய்து பாருங்கள்... குடும்பத்தினர் ருசித்து சாப்பிடுவார்கள்

சென்னை: பருப்பு மாவத்தல் குழம்பை ஒருமுறை உங்கள் குடும்பத்தினருக்கு செய்து கொடுங்கள். இன்னும்... இன்னும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.நமது முன்னோர்கள் எந்தெந்த காலத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டி நமக்கு ஒரு பெரிய உதாரணமாக இருந்திருக்கிறார்கள். அவ்வாறு தாங்கள் உண்ணும் உணவின் மூலமே அவர்களின் வாழ்க்கை முறையை எடுத்துக் கூறியுள்ளனர். வசதியாக இருக்கும் பொழுது சுகமான வாழ்க்கையையும், பணம் இல்லாத நேரத்தில் அதற்கான உணவை சமைத்தும் தங்கள் சிக்கனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பருவகால காய்கறிகளை பதப்படுத்தி, வத்தல் வகை, பருப்பு, தானியம், உப்புக்கண்டம் போன்றவற்றை வாழ்க்கை முறைக்கு ஏற்ப சமைத்து பக்குவமான வாழ்க்கையை வாழ்வதற்கு, நம்மை வழி நடத்திய நமது முன்னோர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

அந்த வகையில் ஒரு சிம்பிளான குழம்பு வகை தான் இந்த பருப்பு குழம்பு. இதனை கம்பஞ்சோறு, கேழ்வரகு கூழ், சப்பாத்தி, இட்லி, தோசை போன்ற உணவுகளுடன் சைட் டிஷ்ஷாக தொட்டுக் கொள்ளலாம். இந்த பருப்பு மாவத்தல் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 100 கிராம், பூண்டு – 7 பல், வரமிளகாய் – 4, சீரகம் – ஒரு ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், மாவத்தல் – 3, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – ஒன்று, பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

lentils,garlic,chili,cumin,salt,marmalade ,துவரம் பருப்பு, பூண்டு, வரமிளகாய், சீரகம், உப்பு, மாவத்தல்

செய்முறை: முதலில் மாவத்தலை சுத்தமாக தண்ணீரில் கழுவி கொண்டு, அதனை நன்றாக ஊற வைக்க வேண்டும். பிறகு துவரம் பருப்பை இரண்டு முறை தண்ணீர் விட்டு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து 20 நிமிடத்திற்கு ஊற வைக்க வேண்டும். பிறகு துவரம் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் சீரகம், பூண்டு, வரமிளகாய் இவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இதனுடன் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு இதனுடன் மாவத்தல் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, சிறிது நேரம் கொதிக்க விடவேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள துவரம் பருப்பு விழுதையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறுதியாக உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அணைத்துவிட வேண்டும். ருசியான மாவத்தல் பருப்பு குழம்பு ரெடி

Tags :
|
|
|
|