Advertisement

காரசாரமான பன்னீர் சில்லி செய்து பாருங்கள்

By: Nagaraj Tue, 01 Nov 2022 11:17:55 AM

காரசாரமான பன்னீர் சில்லி செய்து பாருங்கள்

சென்னை: காரசாரமான பன்னீர் சில்லி நமது வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே மிக எளிமையாக செய்யலாம். செய்வோமா... வாங்க.

தேவையானப் பொருட்கள்:


பன்னீர்- 200 கிராம்
வெங்காயம்- 2 எண்
தக்காளி- 2 எண்
மைதா மாவு – 2 மேசைக்கரண்டி
சோள மாவு- இரண்டு மேசைக்கரண்டி
சிவப்பு மிளாகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
கரமசாலாத் தூள்- கால் தேக்கரண்டி
இஞ்சி- ஒரு துண்டு
பூண்டு- 4 பற்கள்
பச்சை மிளகாய்- 3 எண்
கடுகு- கால் தேக்கரண்டி
கருவேப்பில்லை- ஒரு இணுக்கு
மல்லித்தழை- இரண்டு கொத்து
உப்பு, தண்ணீர், எண்ணெய்- தேவையான அளவு

masala,paneer pieces,karacharam,chilli paneer,ginger,garlic ,மசாலா, பன்னீர் துண்டுகள், காரசாரம், சில்லி பன்னீர், இஞ்சி, பூண்டு

செய்முறை: பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை முறையே தனித்தனியாக சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.


பிறகு, பன்னீர் தோய்த்து பொறித்து எடுக்க மசாலாவை தயார் செய்ய வேண்டும். அதற்கு முதலில், ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, சிவப்பு மிளகாய்த்தூள், சிறுது உப்பு ஆகியவற்றை சேர்த்து உடன் சிறிது தண்ணீரையும் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இந்த மாவு கட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இருக்க கூடாது.


அடுத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து பன்னீர் துண்டுகளை மசாலா மாவில் தொய்த்து, மொறு மொறுப்பாக பொறித்து எடுக்க வேண்டும். பின்பு, மீண்டும் ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் கால் தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிந்ததும், பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்க வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கியவுடன் அதில், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டினை சேர்க்க வேண்டும்.


பிறகு, தக்காளி துண்டுகளை சேர்த்து, சிறிது உப்பும் கரமசாலாவும் சேர்த்து வதக்க வேண்டும். சிறிது கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். இவையனைத்தும் நன்றாக வதங்கியவுடன், நாம் முன்னரே பொறித்து எடுத்த பன்னீர் துண்டுகளைச் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். மசாலாவும் பன்னீர் துண்டுகளும் ஒன்றோடு ஒன்று நன்றாக சேர மல்லித்தழையை தூவி இறக்கிட வேண்டும். அவ்வளவுதான் காரசாரமான சில்லி பன்னீர் தயார்!

Tags :
|
|