Advertisement

சுவையான பேபி கார்ன் பிரை இப்படி செய்து பாருங்கள்

By: Nagaraj Mon, 30 Oct 2023 10:13:14 PM

சுவையான பேபி கார்ன் பிரை இப்படி  செய்து பாருங்கள்

சென்னை; குழந்தைகள் ரசித்து சாப்பிட சுவையான பேபி கார்ன் பிரை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - 10சோள மாவு - அரை கப்மிளகாய்த்தூள் - சிறிதளவுகரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்எலுமிச்சைச்சாறு - சிறிதளவுஎண்ணெய், உப்பு - தேவைக்கு

baby corn fritters,garam masala powder,lemon juice,corn flour ,பேபி கார்ன் பிரை, கரம் மசாலாத்தூள், எலுமிச்சை சாறு, சோளமாவு

செய்முறை: பேபி கார்னை நீள வாக்கில் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க தொடங்கியதும் பேபி கார்னை போட்டு ஓரிரு நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

அவை ஆறியதும் அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும். பின்னர் சோளமாவில் போட்டு புரட்டி எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் பேபி கார்ன்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். ருசியான பேபி கார்ன் பிரை தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

Tags :