Advertisement

தீபாவளிக்கு இந்த பணியாரம் ட்ரை பண்ணி பாருங்க

By: vaithegi Sun, 05 Nov 2023 10:09:55 AM

தீபாவளிக்கு இந்த பணியாரம் ட்ரை பண்ணி பாருங்க

பனங்காயை வைத்து சுவையான பனங்காய் பணியாரம் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
பனங்காயில் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், நார்ச்சத்து, வைட்டமின் சி, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் தாதுக்கள் உள்ளது. பனங்காயில் உள்ள புரதசத்துக்கள், தசைகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள நார்சத்து இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

பனங்காயில் உள்ள பொட்டாசியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. பனங்காய் ஒரு குறைந்த கலோரி உணவாகும். இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

paniyaram,diwali,panangai ,பணியாரம் ,தீபாவளி,பனங்காய்


தேவையானவை பொருட்கள் :

பனங்காய் – 4
மைதா – அரைகிலோ
சீனி – அரை கிலோ
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்து கொள்ள வேண்டும். பின் நன்கு பழுத்த பனங்காயை எடுத்து, அதன் மேல் தோலை உரித்து, பின் அந்த பனங்காயை நன்கு பிசைந்து களி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதனை வெள்ளை துணியில் ஊற்றி பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் பனங்காய் களியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு காய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சிய பின் அதனுள் மைதா மாவு, சீனி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். உளுந்துவடைக்கு மாவு தயார் செய்யும் பதத்தில் பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, நன்கு கொதித்த பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அது பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது மியாகவும் சுவையான பனங்காய் பணியாரம் தயார்.

Tags :
|