Advertisement

குடும்பத் தலைவிகளுக்கு பயனுள்ள சமையல் குறிப்புகள்

By: Nagaraj Mon, 20 Nov 2023 09:40:30 AM

குடும்பத் தலைவிகளுக்கு பயனுள்ள சமையல் குறிப்புகள்

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு பயனுள்ள சமையல் குறிப்புகள் தர்றோம். இந்த டிப்ஸ் உங்களுக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

அடை மாவு, தோசை மாவு புளித்து விட்டால், இரண்டு டம்ளர் வெந்நீர் விடவும். பத்து நிமிடம் கழித்து தெளிந்த நீரை கொட்டி விட்டால் புளிப்பு குறைந்து விடும். பின்பு ஒரு பிடி ரவை அல்லது அரிசி மாவு கலந்தால் சரியாகிவிடும்.

பாசிப் பயறு சுண்டல் செய்வதற்கு, முதல் நாள் இரவு தண்ணீரில் பாசி பயறை ஊற வைக்கவும். அடுத்த நாள் தண்ணீரை வடிகட்டி விட்டு துணியில் கட்டி வைத்தால் முளைகட்டி விடும். இதை சுண்டல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். உடலுக்கு கூடுதல் சத்தும் கிடைக்கும்.

சாம்பார், அவியல், மசியல் செய்யும்போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்தால் வாய்வு சேராது. ஓட்ஸ் உடன் ஒரு பிடி அவல், வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து உப்புமா செய்தால் ருசியாக இருக்கும்.

bitter gourd,chillies,ginger,coconut,cardamom ,பாகற்காய், குடை மிளகாய், இஞ்சி, தேங்காய், கருவேப்பிலை

கத்தரிக்காய், பூசணி போன்ற புளிக்கூட்டு செய்யும்போது கடலைப் பருப்பை கொஞ்சம் குறைத்து விட்டு, மீல்மேக்கர் சேர்த்து செய்தால் சுவை கூடும். தேங்காய் துவையல் அரைக்கும் போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

பாகற்காய், குடை மிளகாய் போன்றவற்றை சிறியதாக நறுக்கி உப்பு, எலுமிச்சம் பழம் சேர்த்தால் ஊறுகாய் ரெடி. தேங்காய் துருவல், பொட்டுக் கடலை, வெல்லம் போன்றவற்றை ஒன்றாக கலந்து மாலையில் நொறுக்குத்தீனியாக சாப்பிடலாம்.

கோவைக்காய், மிளகாய் இவற்றை மிகச் சிறியதாக நறுக்கி பொரியல் செய்தால் சாப்பிட நன்றாக இருக்கும். இஞ்சி, தேங்காய், கருவேப்பிலை கலந்து துவையல் செய்தால் சுவையோ சுவை.

Tags :
|