Advertisement

ருசியான முறையில் வெஜ் சாகு செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sun, 10 July 2022 9:57:28 PM

ருசியான முறையில் வெஜ் சாகு செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: கோவாவில் செய்யப்படும் ருசியான சைட் டிஷ்தான் வெஜ் சாகு. இதை வீட்டில் செய்து பாருங்கள். அருமையாக இருக்கும்.


தேவையானவை

உருளைக்கிழங்கு - ஒன்று
கேரட் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பீன்ஸ் - சிறிது
அரைக்க:
தேங்காய் - கால் கப்
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
பச்சை மிளாகாய் - 2
மிளகு - கால் தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
புளி - சிறிது

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைகேற்ப

coconut,peanuts,poppy seeds,vegetables,coriander leaves ,தேங்காய், பொட்டுக்கடலை, கசகசா, காய்கறிகள், கொத்தமல்லித்தழை

செய்முறை: காய்கறிகளை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காய்கறிகளுடன் உப்பு போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும். வேக வைத்த காய்கறிகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைப் போட்டு தாளித்து, தேங்காய் விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மூடி போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து கெட்டியாக ஆனதும் வெந்த காய்கறிகளைப் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான வெஜ் சாகு ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பூரி, தோசையுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

Tags :