Advertisement

வித்தியாசமான சுவையில் வெண்டைக்காய் தோசை செய்முறை

By: Nagaraj Mon, 25 July 2022 2:30:05 PM

வித்தியாசமான சுவையில் வெண்டைக்காய் தோசை செய்முறை

சென்னை: எப்பவும் ஒரே மாதிரியான தோசை செய்து சாப்பிட்டு போர் அடிக்கிறதா? சற்று வித்தியாசமான தோசையை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா. வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வெண்டைக்காய் தோசை செய்து சாப்பிடுங்கள்.
இந்த வெண்டைக்காய் தோசை குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு வெண்டைக்காய் தோசை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அதன் எளிய செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 1 கப் ,வெண்டைக்காய் – 8-10 ,உப்பு சுவைக்கேற்ப ,தண்ணீர் – தேவையான அளவு

mounds,dosa,salt,karasatni,oil ,வெண்டைக்காய், தோசை, உப்பு, காரசட்னி, எண்ணெய்

செய்முறை:முதலில் அரிசியை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயின் முனைப்பகுதிகளை நீக்கிவிட்டு, அதை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரிசியை நன்கு கழுவி, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் வெண்டைக்காயையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவை உடனே பயன்படுத்தலாம் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

இந்த மாவை புளிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அரைத்த மாவை தோசையாக ஊற்றி, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், வெண்டைக்காய் தோசை தயார். இந்த தோசையை கார சட்னி, தக்காளி சட்னி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Tags :
|
|
|