Advertisement

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த கருப்பட்டி தோசை

By: Nagaraj Fri, 11 Dec 2020 9:08:22 PM

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த கருப்பட்டி தோசை

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கருப்பட்டி தோசை. அந்த காலத்தில் உடல் வலிமை பெறுவதற்கு இந்த தோசை தான் அடிக்கடி சாப்பிடுவார்கள் அல்லது கருப்பட்டி கலந்த உணவைச் சாப்பிட்டால் சுறுசுறுப்பாக வேலை செய்யவும் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது. கருப்பட்டி கலந்த தோசையை எப்படிச் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருள்கள்:

கருப்பட்டி - 1/4 கிலோ
பச்சரிசி - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - 1 ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
வேர்க்கடலை - ஒரு கப்
சுக்குப்பொடி - 1/2 ஸ்பூன்

blackcurrant,paste,lentils,dill ,கருப்பட்டி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போன்றவற்றைச் சேர்த்து சுமார் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டியது அவசியம். பிறகு ஊற வைத்ததைத் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். புளித்த மாவு தான் தோசைக்குச் சுவையாக இருக்கும் என்பதால் ஒரு இரவு முழுவதும் மாவு புளிக்க வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இடித்த கருப்பட்டி வெல்லத்தைச் சேர்த்து தண்ணீரோடு கொதிக்க விடவும். கொதிக்கும் பொழுது ஏலக்காய்த் தூள், சுக்கு பொடி மற்றும் துருவின தேங்காய் ஆகியவை சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
அரைத்த மாவில் காய்ச்சிய வெல்லப் பாகை சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்ற வேண்டும். நன்றாக வெந்தவுடன் கருப்பட்டி தோசை தயார். உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இந்த கருப்பட்டி தோசை.

Tags :
|