Advertisement

அசத்தல் சுவையில் கிராமத்து கோழி ரசம்

By: Monisha Thu, 26 Nov 2020 4:04:47 PM

அசத்தல் சுவையில் கிராமத்து கோழி ரசம்

சுவையான கிராமத்து கோழி ரசம் அல்லது சூப்பை மிக எளிதாக எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்
நாட்டு கோழி - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 15
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 1
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
கருவேப்பிலை, மல்லி இலை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

stunning taste,chicken,broth,soup,ingredients,recipe ,அசத்தல்சுவை,கோழி,ரசம்,சூப்,பொருட்கள்,செய்முறை

செய்முறை
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும். மிளகு , சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். பொடித்த மிளகு, சீரகம், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேக விடவும்.

இறக்கி வைத்து கருவேப்பிலை, மல்லி இலை தூவி பரிமாறவும்.நாட்டு கோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும். தனியாக சூப் மாதிரியும் சாப்பிடலாம். சுவையான கிராமத்து கோழி ரசம் தயார்.

Tags :
|
|