Advertisement

வைட்டமின், நார்ச்சத்துக்கள் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி

By: Nagaraj Tue, 06 Dec 2022 10:24:03 AM

வைட்டமின், நார்ச்சத்துக்கள் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி

சென்னை: காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதில் வைட்டமின் A உள்ளதால் கண்பார்வை பலப்படும் .மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது .முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்கவும் உதவுகிறது .

தேவையான பொருட்கள்:

முந்திரி – 3 டேபிள் ஸ்பூன்
துருவிய கேரட் – 3 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 1 1/2கப்

carrots,dates,cashews,children,health ,கேரட்,  பேரீச்சம்பழம், முந்திரி, குழந்தைகள், ஆரோக்கியம்

செய்முறை: முதல் நாள் இரவே முந்திரியை ஊற வைக்கவேண்டும். மறுநாள் நீரை வடித்துவிட்டு,அதனுடன் துருவிய கேரட், பேரீச்சம்பழம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.


விரும்பினால் சாக்கோ துருவல் தூவி பரிமாறலாம். சுவையான கேரட் முந்திரி ஸ்மூத்தி தயார். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் ஆரோக்கியமும் நிறைந்தது.

Tags :
|