Advertisement

கோடை வெயிலுக்கு குளுமையாக சாப்பிட தர்பூசணி ஐஸ்கிரீம் செய்முறை

By: Nagaraj Sat, 23 May 2020 1:42:21 PM

கோடை வெயிலுக்கு குளுமையாக சாப்பிட தர்பூசணி ஐஸ்கிரீம் செய்முறை

கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. இந்த நேரத்தில் கிடைக்கக் கூடிய பருவகால பழங்களில் தர்பூசணியும் ஒன்று. அதை வைத்து எப்படி ஐஸ் கிரீம் செய்யலாம் என்று தெரிந்து கொண்டு நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருட்கள்

தர்பூசணி - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு
ஃபிரெஷ் கிரீம் - 1 ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி

watermelon,ice cream,fresh cream,rose essence,sugar ,
தர்பூசணி, ஐஸ்கிரீம், பிரெஷ் கிரீம், ரோஸ் எசன்ஸ், சர்க்கரை

செய்முறை
தர்பூசணியை விதையில்லாமல் எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். பின் அதில் ஃபிரெஷ் கிரீம் சேர்த்து நன்கு அரையுங்கள். கூடவே ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்கு அரைத்து அதை அப்படியே ஒரு கிண்ணத்தில் ஊற்றி ஃபிரீசரில் வையுங்கள். 2 மணி நேரம் கழித்துப் பார்த்தால் கெட்டியான பதத்தில் தர்பூசணி ஐஸ்கிரீம் தயார். எளிமையாகவும், விரைவாகவும் செய்யலாம்.

Tags :