Advertisement

உடல் எடையை குறைக்கும், ஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம்

By: Nagaraj Fri, 11 Sept 2020 08:44:33 AM

உடல் எடையை குறைக்கும், ஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம்

கொள்ளு உடல் எடையினைக் குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது, மேலும் இந்த கொள்ளு ரசத்தினை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கொள்ளு - கால் கப்,
புளி – சிறிதளவு,
தக்காளி - 2,
மிளகு- 2 ஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
பூண்டு - 6,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நெய் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

body weight,buttermilk,pepper,cumin,tomatoes ,உடல் எடை, கொள்ளு ரசம், மிளகு, சீரகம், தக்காளி

செய்முறை: தக்காளியினை நறுக்கவும், அடுத்து புளியை கரைத்துக் கொள்ளவும். அடுத்து கொள்ளினை 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்து அதனை அலசி, குக்கரில் வேக வைத்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

பின்னர் நெய்விட்டு கடுகு, மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தக்காளியைப் போட்டு வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு, புளிக் கரைசலை சேர்த்து, அரைத்த கொள்ளு, மிளகாய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் கொள்ளு ரசம் ரெடி.

Tags :
|
|