Advertisement

அட்டகாசமான கோதுமை மாவு மசாலா தோசை!

By: Monisha Wed, 29 July 2020 4:53:52 PM

அட்டகாசமான கோதுமை மாவு மசாலா தோசை!

எப்போதும் ஒரே மாதிரி தோசை செய்து சாப்பிடாமல் இன்று புது விதமாக மசாலா பொருட்கள் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
கோதுமை - 1 கப்
அரிசி மாவு - அரை கப்
வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தே. அளவு
பச்சை மிளகாய் - 1

wheat flour,spicy dosa,onion,coriander,rice flour ,கோதுமை மாவு,மசாலா தோசை,வெங்காயம்,கொத்தமல்லி,அரிசி மாவு

செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவை போட்டு நன்றாக கலந்து அதில் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலக்கிக்கொள்ளவும்.

அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து வதங்கியதும் மாவில் சேர்த்து கலக்கவும். அடுத்து மாவில் கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். சூப்பரான கோதுமை மசாலா தோசை தயார்.

Tags :
|