Advertisement

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வெங்காய சூப்

By: Nagaraj Sat, 09 May 2020 12:38:44 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வெங்காய சூப்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். புற்றுநோயைத் தடுக்கும் மகத்துவம் கொண்டது வெங்காய சூப். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை


பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 4
பூண்டுப் பற்கள் - 4
பச்சைமிளகாய் - 2
கெட்டியான தேங்காய்ப்பால் - அரை கப்
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு- ஒரு டீஸ்பூன்
சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை

வாணலியில் வெண்ணெயைப் போட்டு பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதில், மூன்று கப் நீர் விட்டு மசாலா, உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.

வெந்ததும் சிறிது ஆறவிட்டு, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, மிளகுத்தூள், கரைத்த சோள மாவு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு கொதி வர ஆரம்பிக்கும்போது, தேங்காய்ப்பாலை ஊற்றி, கொதிக்கவிட்டு மல்லித்தழையைத் தூவி இறக்க வேண்டும்.

பலன்கள்

வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும். இதில் உள்ள குரோமியம், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தி, வெங்காயம, ரத்த சர்க்கரை.

Tags :
|