Advertisement

  • வீடு
  • சமையல் குறிப்புகள்
  • ரொம்ப சிம்பிளா அதிக டேஸ்ட்டா முருங்கைக்காய் குழம்பை இப்படியும் செய்யலாம் டிரை பன்னி பாருங்க

ரொம்ப சிம்பிளா அதிக டேஸ்ட்டா முருங்கைக்காய் குழம்பை இப்படியும் செய்யலாம் டிரை பன்னி பாருங்க

By: vaithegi Mon, 21 Aug 2023 4:30:22 PM

ரொம்ப சிம்பிளா அதிக டேஸ்ட்டா முருங்கைக்காய் குழம்பை இப்படியும் செய்யலாம் டிரை பன்னி பாருங்க

முருங்கக்காய் வைத்து செய்யப்படும் குழம்பின் ருசிக்கு மற்ற குழம்புகள் ஈடாகாது. இது இந்த குழம்பின் ருசி தெரிந்தவர்களுக்கு நன்றாக புரியும். முருங்கைக்காய் வைத்து செய்யப்படும் குழம்புகள் அனைத்தையும் அசைவ குழம்பு அளவுக்கு ருசியாக இருக்கும்.

செய்முறை :

இந்த குழம்பு செய்ய ஒரு முருங்கைக்காய் முதலில் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு மீடியம் சைஸ் மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் கடாய் வைத்து நறுக்கிய முருங்கைக்காய், மாங்காய் இரண்டையும் சேர்த்த பிறகு அரைக் கப் தண்ணீர் ஊற்றி கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 5 நிமிடம் வரை வேக விடுங்கள்.

இந்த குழம்பிற்கு ஒரு மசாலாவை தயார் செய்ய வேண்டும். அதற்கு மிக்ஸி ஜாரில் அரைக்கப் தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் 10 சின்ன வெங்காயம் தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் 5 பல் பூண்டு, ஒரு இன்ச் அளவிற்கு சிறிய துண்டு இஞ்சி, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 1 முறை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

 ,முருங்கைக்காய் ,குழம்பு

அதன் பிறகு இதில் கால் கப் தண்ணீர் ஊற்றி இந்த மசாலாவை நல்ல பைன் பேஸ்ட்டாக ஆக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது வேக வைத்த காய் முக்கால் பாகம் வரை வெந்திருக்கும். இந்த நேரத்தில் அரைத்த மசாலாவை அதில் ஊற்றி மேலும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே நாம் காய் வேக வைக்கும் போது உப்பை சேர்த்திருக்கிறோம். எனவே இப்பொழுது கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் சேர்த்த பிறகு குழம்பு பச்சை வாடை போகும் வரை ஒரு 5 நிமிடம் கொதித்தால் போதும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது இந்த குழம்பிற்கு ஒரு தாளிப்பை தயார் செய்து விடுவோம். அதற்கு அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கால் டீஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொரிந்த பிறகு 1 கொத்து கருவேப்பிலையும் 5 சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.இப்போது வெங்காயம் அதிகமாக வதங்க வேண்டாம். லேசாக வதங்கிய பிறகு இந்த தாளிப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கும் குழம்பில் ஊற்றிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான முருங்கைக்காய் மாங்காய் குழம்பு 10 நிமிடத்தில் தயார்.

Tags :