Advertisement

ருசியும், சுவையும் மிகுந்த சேமியா கஸ்டட்டை வீட்டிலேயே தயாரிக்கலாம்

By: Nagaraj Mon, 25 July 2022 2:31:06 PM

ருசியும், சுவையும் மிகுந்த சேமியா கஸ்டட்டை வீட்டிலேயே தயாரிக்கலாம்

சென்னை: சேமியா கஸ்டட் ஒரு நல்ல உணவு பொருள் ஆகும். இது ஆரோக்கியம் நிறைந்தது மட்டும் இல்லாமல் சுவையும் நிறைந்தது. ஹோட்டல் உணவு போல வீட்டிலேயே நாம் இந்த சுவையான சேமியா கஸ்டட் தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள் :-
சேமியா – 1 பாக்கெட்,நெய் – அரை ஸ்பூன் ,சர்க்கரை – அரை கப் ,பால் – அரை கப்,கஸ்டட் – 2 ஸ்பூன்,சப்ஜா விதைகள் – 2 ஸ்பூன்,பழ வகைகள்- திராட்சை, வாழைப்பழம், மாதுளை பழம்,ஆப்பிள், அன்னாசி பழம், பப்பாளி பழம், வெள்ளரிக்காய் பிஞ்சு

semiya,custard,nuts,fruits,taste,health ,சேமியா, கஸ்டட், நட்ஸ்வகைகள், பழங்கள், ருசி, ஆரோக்கியம்

செய்முறை:சேமியா கஸ்டட் தயார் செய்வதற்கு முதலில் ஒரு வாணலியை எடுத்து அதுல சிறிதளவு நெய் ஊற்றி சேமியாவினை போட்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில பால் ஊத்தி நன்கு கொதிக்க வச்சு காய்ச்சி கொள்ள வேண்டும். காய்ச்சிய பாலில் நாம வறுத்து வச்ச சேமியாவினை எடுத்து போட்டு நன்கு கலக்கி வேக வைக்க வேண்டும். இப்போது நாம எடுத்து வச்ச ஒரு கப் சர்க்கரை ஐ எடுத்து போட்டு கலக்கி விட வேண்டும். பிறகு ஒரு ஐந்து நிமிடம் கழித்து அதுல நாம எடுத்து வச்ச கஸ்டட் 2 ஸ்பூன் எடுத்து போட்டு நன்கு வேக விடணும்.

இப்ப நன்கு கொதித்த பின் அடுப்பை அணைத்துவிட்டு அவற்றை ஒரு பாத்திரத்தில மாற்றி ஃபிரிட்ஜில் ஒரு இரண்டு மூன்று மணி நேரம் வைத்து விடனும்.நாம எடுத்து வச்ச பழ வகைகளை எடுத்து உரித்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளணும்.

பிறகு ஃபிரிட்ஜில் வைத்த சேமியாவினை எடுத்து அவற்றை ஒரு கண்ணாடி குவளையில் சிறிதளவு சப்ஜா விதை போட்டு அடுத்து அதன்மேல் நாம செஞ்சு வச்ச சேமியாவை எடுத்து போட்டு பழ வகைகளை ஒவ்வொரு பலவகைகளையும் வரிசையாக சேர்க்க வேண்டும்.

அதன்மேல் சேமியாவை எடுத்து போட்டு வைக்கணும்.இப்போது இது நாம் உண்பதற்கு தயார் ஆகி விட்டது. நாம் சேர்த்த பலவகைகளில் அவரவர் விருப்பத்திற்க்கு ஏற்ற பழ வகைகளை சேர்த்து கொள்ளலாம். மேலும் அதன் மேல் சிறிதளவு நட்ஸ் வகைகளை தூவி உண்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

இவற்றை நன்கு குளிராக உண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் ஃபிரிட்ஜில் வைத்து ஐஸ் க்ரீம் போன்றும் உண்ணலாம். பழங்கள் தான் அதிகமாக சேர்த்துள்ளோம். அவை நம் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரவல்லது. ஒவ்வொரு பழங்களிலும் மிகுந்த சத்துக்கள் உள்ளது. இவை. உடலுக்கு நல்ல ஆரோக்கியம் அளிக்கிறது. இந்த ருசியான மற்றும் ஆரோக்கியமான சேமியா கஸ்டட்டை தங்கள் வீட்டிலேயே தயார் செய்து ருசித்து பார்க்கலாம்.

Tags :
|
|
|
|