Advertisement

வீட்டிலேயே ருசியாக சாக்கோ சிப்ஸ் குல்ஃபி செய்யலாம் வாங்க!!!

By: Nagaraj Thu, 11 May 2023 10:29:51 AM

வீட்டிலேயே ருசியாக சாக்கோ சிப்ஸ் குல்ஃபி செய்யலாம் வாங்க!!!

சென்னை: குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் ரொம்ப பிடிக்கும். வீட்டிலேயே குல்ஃபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : பால் - 2 கப் பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன் சாக்லேட் - 1 கப் (துருவியது) சாக்கோ சிப்ஸ் - விருப்பத்திற்கேற்ப சர்க்கரை - 1/2 கப் பிஸ்தா, பாதாம் - சிறிது (நறுக்கியது)

chocolate kulfi,almonds,pistachios,sugar,choco chips ,சாக்லேட் குல்பி, பாதாம், பிஸ்தா, சர்க்கரை, சாக்கோ சிப்ஸ்

செய்முறை: ஒரு பௌலில் பாலை ஊற்றி, அதில் பால் பவுடர் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும் ஒரு அகன்ற அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

அப்படி கொதிக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். இல்லையெனில் அடிபிடித்து விடும். பாலானது சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, அதில் பாதாம், பிஸ்தா மற்றும் துருவிய சாக்லேட்டை போட்டு, சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.

1 மணிநேரம் ஆன பின்னர், அதனை வெளியே எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து, பின் அதனை குல்ஃபி மோல்ட்டில் ஊற்றி சாக்கோ சிப்ஸ் தூவி, அதன் நடுவே குச்சியை வைத்து, ப்ரீசரில் 6 மணிநேரம் வைத்து எடுத்தால், சாக்லேட் குல்ஃபி ரெடி!!!

Tags :
|