Advertisement

வீட்டிலேயே செய்யலாம் வெஜிடபிள் சீக் கபாப்... ருசி அலாதியாக இருக்கும்!!!

By: Nagaraj Thu, 13 July 2023 11:13:03 AM

வீட்டிலேயே செய்யலாம் வெஜிடபிள் சீக் கபாப்... ருசி அலாதியாக இருக்கும்!!!

சென்னை: ஓட்டல் சுவையில் வெஜிடபிள் சீக் கபாப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு - அரை கிலோபச்சை பட்டாணி - 50 கிராம்கேரட் - 1பீன்ஸ் - 10காலிஃப்ளவர் - கொஞ்சம்மிளகாய் தூள் - 1 தேக்கரண்டிசீரகத்தூள் - அரை தேக்கரண்டிசாட் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டிகரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டிஉப்பு, வெண்ணெய் - தேவைக்கு ஏற்ப

carrots,beans,cauliflower,avocado,sauce,kebab ,கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், வெண்ணெய், சாஸ், கபாப்

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர் போட்டு வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் ஆறவைத்து அதனுடன் பச்சை பட்டாணி சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து கொள்ளவும். இத்துடன் மிளகாய் தூள், சீரகத்தூள், சாட் மசாலாத் தூள், கரம் மசாலாத் தூள், உப்பு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

கிரில் கம்பியில் வெண்ணெய் தடவி கொழுக்கட்டை போல் மாவை கம்பியில் பிடித்து வைக்கவும்.
இதனை பார்பிக்யூ சார்க்கோல் கிரில் அடுப்பில் வைத்து 20 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும். (குறிப்பு: பார்பிக்பூ அடுப்பு இல்லாதவர்கள் தோசைக் கல்லில் போட்டும் எடுக்கலாம். அவ்வப்போது அதன் மீது வெண்ணெய் தடவி விட்டால் சட்டென கருகாது.

வெந்ததும் மெதுவாக கம்பியில் இருந்து உருவி, சாஸ், உடன் பரிமாறவும். இப்போது சூப்பரான வெஜிடபிள் சீக் கபாப் ரெடி.

Tags :
|
|