Advertisement

குழந்தைகளுக்கான ஊட்டசத்து பானத்தை வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க

By: Nagaraj Mon, 20 Nov 2023 09:44:47 AM

குழந்தைகளுக்கான ஊட்டசத்து பானத்தை வீட்டிலேயே தயார் செய்யலாம் வாங்க

சென்னை: இனி வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள டிரிங்க் தயார் செய்து கொடுக்கலாம். அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய காலகட்டத்தில், உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு உணவுகள் மூலம் கிடைக்கும் இயற்கை புரதச்சத்துகளை விட புரோட்டீன் பவுடர்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் மூலம் கிடைக்கும் புரதச்சத்துக்களையே விரும்புகின்றனர்.

இயற்கையாக உற்பத்தியாகும் உணவை சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது, ஆன்டிஆக்ஸிடன்ட், போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும். ஆனால், புரோட்டீன் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும் போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேராது. எனவே இனி வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள டிரிங்க் தயார் செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:
பாதாம்- 50 கிராம்முந்திரி- 50 கிராம்கோகோ பவுடர்- 3 ஸ்பூன் (தேவைஎன்றால்)அக்ருட் (வால்நட்)- 8-10கேழ்வரகுமாவு- 3 ஸ்பூன்நாட்டுச்சர்க்கரை- தேவையான அளவு

nutcharkarai,coca powder,kelp flour,walnut,cashew ,நாட்டுச்சர்க்கரை, கோகா பவுடர், கேழ்வரகு மாவு, வால்நட், முந்திரி

செய்முறை: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று கேழ்வரகு மாவையும் அதே வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வறுத்த நட்ஸ் கலவைகளை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். பொடித்த கலவையுடன் வறுத்த கேழ்வரகு மாவு, கோகோ பவுடர் (கண்டாயம் இல்லை), நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஊட்டச்சத்து நிறைந்த பவுடரை அதன் ஈரத்தன்மை போகிற அளவுக்கு வெளியே வைத்து பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளலாம். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து 6 மாதம் வரை பயன்படுத்தலாம். இந்த பவுடரை பாலில் கலந்து குழந்தைகளுக்கு பருகுவதற்கு கொடுக்கலாம்.

Tags :
|