Advertisement

ருசி மிகுந்த வாழைத்தண்டு துவையல் செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Wed, 08 Nov 2023 3:48:02 PM

ருசி மிகுந்த வாழைத்தண்டு துவையல் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: ருசியும், ஆரோக்கியமும் நிறைந்த வாழைத்தண்டு துவையல் செய்வது கொடுத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். அதன் செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - சிறிய துண்டுதேங்காய் - 1 துண்டுதனியா - கால் டீஸ்பூன்கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் - இரண்டுபூண்டு - நான்கு பல்புளி - நெல்லிக்காய் அளவுஉப்பு - தேவையான அளவுகடுகு - சிறிதளவுநல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

banana stem,garam masala,grated coconut,tamarind,dry chillies ,வாழைத்தண்டு, துவையல், தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய்

செய்முறை: முதலில் தேங்காயை துருவிக்கொள்ள வேண்டும். பின் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து பின் தனியாவை, போட்டு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வாழைத்தண்டையும் போட்டு வதக்கவும். தண்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பின் தேங்காய் துருவல், புளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறிய பிறகு பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு நன்றாக அரைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து துவையலில் கொட்டி பரிமாற சுவையான வாழைத்தண்டு துவையல் தயார்.

Tags :