Advertisement

ருசியாக கத்திரிக்காய் வறுவல் செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Thu, 09 Feb 2023 08:53:41 AM

ருசியாக கத்திரிக்காய் வறுவல் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: கத்தரிக்காயில் ருசியான வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த செய்முறையை வைத்து செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – 6மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்கடலை மாவு – 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவு

வறுத்து அரைக்க:
தனியா – 2 டீஸ்பூன்கடலை பருப்பு – 1 ஸ்பூன்உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்மிளகு – அரை ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 2கறிவேப்பிலை – சிறிதளவு

brinjal fry,dry chilly,pepper , கடலை பருப்பு, கத்தரிக்காய், வறுவல்

செய்முறை: கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து, அரைத்த பொருட்களை தனித்தனியாக வறுத்து, ஆறவைக்கவும். கத்தரிக்காயை வட்டமாக நறுக்கி தண்ணீரில் போடவும்.
அடுத்து தண்ணீரை வடித்துவிட்டு அதன் மேல் மிளகாய்த்தூள், கடலை மாவு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கத்தரிக்காய் முழுவதும் விழும்படி நன்றாகக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். தோசைக்கல் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கத்தரிக்காயை பொடி செய்து வைத்துள்ள மசாலாவில் போட்டு தோசைக்கல்லை தோசைக்கல்லில் வைத்து சுற்றிலும் எண்ணெய் தடவவும்.

2 நிமிடம் கழித்து புரட்டவும். இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும். மீதமுள்ள அனைத்து கத்திரிக்காய் துண்டுகளையும் அதே முறையில் வறுக்கவும். சுவையான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல் தயார்.

Tags :