Advertisement

சுவை மிகுந்த எலுமிச்சை சேவை செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Sun, 17 July 2022 11:24:24 PM

சுவை மிகுந்த எலுமிச்சை சேவை செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: குழந்தைகளுக்கு அருமையாக சுவையில் எலுமிச்சை சேவை செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். எளிதில் ஜீரணமாகும்.
தேவையானவை:
சேவை - 200 கிராம் பாக்கெட்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கீறிய பச்சைமிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 4
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
துருவிய தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

serve with lemon,green chillies,cashew nuts,urad dal,mustard ,எலுமிச்சை சேவை, பச்சைமிளகாய், முந்திரி பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சேவையை எடுத்துக் கொள்ளவும். சேவை மூழ்கும் வரை கொதிக்கும் வெந்நீரை ஊற்றவும். ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். அதில் பச்சைமிளகாய், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

பின்னர் துருவிய தேங்காய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி விடவும். வதக்கியவற்றுடன் வேக வைத்த சேவையை சேர்த்து நன்றாக கலந்து விட்டு சிறிது நேரம் கழித்து இறக்கவும். சுவையான எலுமிச்சை சேவை தயார்.

Tags :