Advertisement

  • வீடு
  • சமையல் குறிப்புகள்
  • சுரைக்காய் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள் சுரைக்காயில் போளி செய்து பாருங்கள்

சுரைக்காய் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள் சுரைக்காயில் போளி செய்து பாருங்கள்

By: vaithegi Tue, 14 June 2022 5:33:52 PM

சுரைக்காய்  சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள்  சுரைக்காயில் போளி செய்து பாருங்கள்

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு, சுரைக்காய்த் துருவல் – தலா 1 கப்
வெல்லத் தூள் – அரை கப்
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்
சுக்குத் தூள், ஏலக்காய் தூள் – தலா 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
நெய் – 6 டீஸ்பூன்

zucchini,wheat,fake ,சுரைக்காய் , கோதுமை,  போளி

செய்முறை :
நெய்யில் சுரைக்காய்த் துருவலை நன்கு வதக்குங்கள். சுரைக்காய் வெந்ததும் தேங்காய்த் துருவல், வெல்லத் தூள் இரண்டையும் சேர்த்துக் கிளறிவிடுங்கள். எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து சுருண்டு வரும்போது சுக்குத் தூளையும் ஏலக்காய்த் தூளையும் சேர்த்து இறக்கிவிடுங்கள்.

கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவுபோல் பிசைந்துகொள்ளுங்கள். மாவு சிறிது நேரம் ஊறிய பிறகு அதைச் சிறு உருண்டையாக எடுத்து சப்பாத்திபோல் திரட்டுங்கள். நடுவில் சுரைக்காய் பூரணத்தை வைத்து மூடி மீண்டும் சப்பாத்தி போல் லோசாகத் திரட்டி தோசைக் கல்லில் போடுங்கள். சுற்றிலும் நெய்விட்டு இரண்டு புறங்களும் நன்றாக வேகவைத்து எடுங்கள்.

Tags :
|