Advertisement

விரைவில் வாட்ஸ்அப் செயலியில் ஃபேஸ் அன்லாக் அம்சம் வருகிறது

By: Nagaraj Mon, 26 Oct 2020 2:01:08 PM

விரைவில் வாட்ஸ்அப் செயலியில் ஃபேஸ் அன்லாக் அம்சம் வருகிறது

விரைவில் வாட்ஸ்அப் செயலியில் ஃபேஸ் அன்லாக் அம்சம் வரப்போகிறது என்று தெரிய வந்துள்ளது.

வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது இரண்டு சிறப்பான அம்சங்களை வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் ஆப் செயலியில் தற்போது ஃபேஸ் அன்லாக் வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பின் தற்போதைய பீட்டா செயலியில் 2.20.203.3 அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது.

whatsapp,base unlock,test,users,first test ,வாட்ஸ் அப், பேஸ் அன்லாக், சோதனை, பயனர்கள், முதல்கட்ட சோதனை

ஸ்மார்ட்போன்களை தற்போது வாங்க நினைக்கும் பலரும் எதிர்பார்க்கும் அம்சங்களில் ஒன்றுதான் ஃபேஸ் அன்லாக் அம்சமும் ஒன்றாகும்.

கல்லூரி இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் எதிர்பார்க்கும் மிகவும் முக்கியமான அம்சமாக ஃபேஸ் அன்லாக் செயலியானது இருந்து வருகின்றது, பயனர்களால் மிகவும் விரும்பப்படும் இந்த செயலியினை வாட்ஸ் அப் நிறுவனம் அதன் செயலியில் சேர்க்க முடிவு எடுத்துள்ளது.

அதாவது வாட்ஸ் அப் செயலியின் இந்த பேஸ் அன்லாக் வசதி தற்போது முதல் கட்ட சோதனையில் உள்ள நிலையில் சில மாதங்களில் பயனர்களைக் குஷிப்படுத்தும் வகையில் வெளியிடும் என்று தெரிகின்றது.

Tags :
|
|