Advertisement

தொடர் சரிவில் முட்டை விலை

By: vaithegi Sat, 02 Dec 2023 10:45:43 AM

தொடர் சரிவில் முட்டை விலை


நாமக்கல் : முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.90 காசுகளில் இருந்து 15 காசுகள் குறைத்து ரூ. 4.75 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று (1-12-2023) மாலை அறிவித்து உள்ளது. இந்த விலை இன்று (2-12-2023) காலை முதல் அமலுக்கு வருகிறது.

இதனை அடுத்து தற்போது சபரிமலை சீசன் காரணமாக முட்டையின் நுகர்வும் , விற்பனையும் குறைந்து உள்ளது.பிற மண்டலங்களிலும் முட்டை விலை குறைந்து கொண்டே வருகிறது.இதுவே விலை குறைவுக்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள். கடந்த 2 நாட்களில் முட்டை விலை 35 காசுகள் குறைந்துள்ளது.

egg price,namakkal mandal national egg coordinating committee ,முட்டை விலை ,நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.

இதையடுத்து மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதம் உள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.

Tags :