- வீடு›
- வணிகம் or வர்த்தகம்›
- காய்கறிகளின் விலையானது தற்போது திடீரென்று உயரத் தொடங்கியுள்ளது
காய்கறிகளின் விலையானது தற்போது திடீரென்று உயரத் தொடங்கியுள்ளது
By: vaithegi Wed, 29 Nov 2023 3:15:17 PM
சென்னை: சரசரவென உயரும் காய்கறிகள் விலை ....தமிழகத்தில் பொதுவாக காய்கறிகளின் விலை ஆனது தினசரி விலை மாற்றங்களை சந்தித்து கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது சபரிமலை சீசன் என்பதால் அதிக அளவிலானவர்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள்.
எனவே இதன் காரணமாக காய்கறிகள், பூக்களின் விலைகள் ஆனது வழக்கத்தை விட சற்று அதிகரித்து உள்ளது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி காய்கறிகளின் விலை ஒரு கிலோ என்று அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.
அவரைக்காய் ரூபாய் 50, பீன்ஸ் ரூபாய் 45, பீட்ரூட் ரூபாய் 30, கத்தரிக்காய் ரூபாய் 35, பட்டர் பீன்ஸ் ரூபாய் 64, கேரட் ரூபாய் 3, காலிபிளவர் 130, முருங்கைக்காய் ரூபாய் 80, பூண்டு ரூபாய் 169,
இதனை அடுத்து இஞ்சி ரூபாய் 240, பட்டாணி ரூபாய் 150, பச்சை மிளகாய் ரூபாய் 25, வெண்டைக்காய் ரூபாய் 35, சின்ன வெங்காயம் ரூபாய் 95, பெரிய வெங்காயம் ரூபாய் 55, தக்காளி ரூபாய் 45, மஞ்சள் பூசணி ரூபாய் 25.