Advertisement

புதிய உச்சம் தொட்ட தங்கம்

By: vaithegi Sat, 02 Dec 2023 2:27:51 PM

புதிய உச்சம் தொட்ட தங்கம்

சென்னை: தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,915-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.47,320-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.51,080-க்கு விற்பனையாகிறது.

gold,sale ,தங்கம்,விற்பனை


இதேபோல், 1 கிராம் வெள்ளி விலை இன்று ரூ.1.00 அதிகரித்து ஒரு கிராம் ரூ.83.50-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.83,500 ஆக இருக்கிறது. கடந்த 2022 டிச.26-ம் தேதி 1 பவுன் விலை ரூ.43,040 ஆக அதிகரித்தது. பின்னர், இந்தாண்டு ஜன.27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரூ.42,700 முதல் ரூ.42,800 வரை விற்பனையானது. பிப்.2-ம் தேதி ரூ.44,040, மார்ச் 5-ம் தேதி ரூ.45,520, மே 3-ம் தேதி ரூ.45,648 எனத் தொடர்ந்து அதிகரித்தது. ஜூன் 4-ம் தேதி ரூ.46,000 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது.

சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் எனவும், அத்துடன், உள்நாட்டிலும் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது. எனவே, இன்னும் ஓரிரு மாதங்களுக்கு தங்கம் விலை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.

Tags :
|