Advertisement

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி

By: vaithegi Sat, 02 Dec 2023 2:43:52 PM

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 தள்ளுபடி

சென்னை: தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தை நிறுத்திவிட்டு, 3.5 சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட டிலைட் ஊதா நிற பாக்கெட்டை விநியோகிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் கடும் எதிர்ப்பு காரணமாக பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தப் போவதில்லை எனவும்அதேநேரத்தில் டிலைட் பால் விற்பனையை ஊக்குவிக்கப் போவதாகவும் ஆவின் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மாதாந்திர அட்டைதாரர்களுக்கான டிலைட் பால் விற்பனை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுதொடர்பாக ஆவின் அதிகாரிகள் பேசியதாவது: பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையிலும் அனைத்து வயதினரும் பருகும் வகையிலும் கடந்த மே 9-ம் தேதி வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 500 மிலி ஆவின் டிலைட் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

discount,aavin ghee price ,தள்ளுபடி, ஆவின் நெய் விலை


இதைத் தொடர்ந்து தற்போது ஆவின் 500 மிலி டிலைட் பால் ரூ.21 விலையில் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கும் நேற்று முதல் அனைத்து வட்டார அலுவலகங்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பொது மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ரூ.10-க்கு 200 மிலி ஆவின் டிலைட் பால் நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் இடையே, பொதுமக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய் வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் வருகிற ஜன.20-ம் தேதி வரை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இத்தள்ளுபடி விலையில் ஆவின் நெய்யை பெற்று பயன்பெறலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags :